ஹரீஷ் கல்யானின் ஜோதிட நம்பிக்கை தான் தனுசு ராசி
ஹரீஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே படப்பிடிப்பு தளம் முழுக்க பிரமாண்டம் நிறைந்திருக்கிறது. இந்த படம் அதன் தனித்துவமான தலைப்பினாலும் மற்றும் அழகான நாயகன் ஹரீஷ் கல்யாண் நடிப்பதாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புகளை இப்போதே ஏற்படுத்தியுள்ளது. மிகச்சரியான ஒரு முன் திட்டமிடலுடன் ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் கருவை அடிப்படையாக கொண்டு மிக பிரமாண்டமாக உருவாகும் ஒரு பாடலை படம் பிடித்து வருகிறார்கள்.
இது குறித்து இயக்குனர் சஞ்சய் பாரதி கூறும்போது, "தனுசு ராசி நேயர்களே என்ற தலைப்பை குறிக்கும் வகையில் ராசி, நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடலை படத்தில் வைக்க நாங்கள் விரும்பினோம். இந்த படத்தின் ஹீரோ ஜாதகங்களில் மிகுந்த நம்பிக்கை உடையவர், அதன் அடிப்படையில் தான் வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் முடிவெடு...