முதல் முறையாக கார்த்தியோடு கைகோர்க்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்!
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் அடுத்த படம் ‘கடைகுட்டி சிங்கம்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டி வரும் நிலையில் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் அறிமுக இயக்குனர் ரஜத்.
ரஜத், ஆர்.கண்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த ரகுல் ப்ரீத்சிங் மறுபடியும் இந்தப் படத்தில் ஜோடி போடுகிறார். இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்தி படத்துக்கு ஹாரிஸ் இசையமைப்பது இதுதான் முதல்முறை....