ஹவுஸ் ஓனர் பற்றி நிச்சயம் எனக்கு வெற்றியை தரும் ‘பசங்க’ கிஷோர்
நேற்று வெளியாகி ரசிகர்களும் சரி விமர்சர்களாலும் மிகவும் பாராட்டப்பட்ட படம் என்றால் அது ஹவுஸ் ஒனர் இந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி நடிகர் கிஷோர் கூறியிருக்கிறார்
'பசங்க' படத்தில் அழகான, தனது தீங்கற்ற இயல்புடைய கதாபாத்திரத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே இரவில் உறுப்பினராகி, அதைத் தொடர்ந்து ‘கோலி சோடா’ படத்தில் டீனேஜ் பையனாக அவதாரம் எடுத்தவர் கிஷோர். இந்த படங்களின் மூலம் புகழ்பெற்ற கிஷோர், தற்போது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு முதிர்ச்சியடைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹவுஸ் ஓனர்' திரைப்படம் வரும் ஜூன் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
ஒரு நடிகராக படங்களை தேர்ந்தெடுப்பதில் ஒருபோதும் அவசரப்படாத கிஷோர், இந்த படம் தனக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதைப் பற்றி பேசுகிறார். அவர் கூறும்போது, "பசங்க, கோலி சோடா மற்றும் சகா போன்ற திரைப்படங்களின் மூலம் சில அங்கீகார...