
கதைக்காக தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட இமை நாயகன்
'இமை' படத்துக்காக அதில் நாயகனாக நடிக்கும் சரிஷ் சிரமப்பட்டுத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார். கரடு முரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை தான் 'இமை'. இப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளவர் சரிஷ்.
படத்தில் நடித்த சரிஷ் தன் அனுபவம் பற்றிக் கூறும் போது, "இது ஒரு ரவுடி சார்ந்த கதைதான் என்று கேள்விப்பட்டதுமே என் தோற்றத்தை இயக்குநர் கூறியபடி மாற்ற ஆரம்பித்தேன். கொழு கொழு உடம்பை இளைக்க வைத்தேன். தாடி வளர்க்கத் தொடங்கினேன். தலையைச் சரியாக வாராமல் முடியை வளர்த்தேன். என் நிறத்தை மங்கலாக்க வெயிலில் நின்று கறுத்தேன்.
இவ்வளவும் செய்து மாறிய பின், என் தோற்றம் இயக்குநருக்குப் பிடித்து ஒரு வழியாகத் திருப்தி வந்த பிறகுதான் படப்பிடிப்புக்கே போனோம்.
படப்பிடிப்பில் நடித்துப் பார்த்த போது தான் நடிப்பு என்றால் எவ்வளவு சிரமம் எ...