IMDb எதிர்பார்ப்பு பட்டியலில் டாப்-3-ல் ‘ஜி.டி.என்.’… ஆர். மாதவனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
IMDb எதிர்பார்ப்பு பட்டியலில் டாப்-3-ல் ‘ஜி.டி.என்.’... ஆர். மாதவனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
சென்னை:
ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், IMDb வெளியிட்டுள்ள "Most Anticipated New Indian Movies and Shows" பட்டியலில் 11.1% ரியல் டைம் பிரபலத்தன்மை மதிப்பெண்ணுடன் மூன்றாவது இடத்தை இந்த திரைப்படம் பிடித்துள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், ஆரம்ப அறிவிப்பிலிருந்தே நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம் ம...
