
”நடனப்புயலாக மாறிய நெல்லைப்புயல் இமான் அண்ணாச்சி”
சமூக போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்து படமாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையான அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி நடிக்கிறார் இப்படத்தில் வரும் ஒரு பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். அப்பாடல் வரிகள்
“சாராய மண்டைய மண்டைய
குண்டக்க மண்டக்க, நெஞ்சுல சாத்திக்க
ஜவ்வாது இவ நெஞ்சுல பூசிக்க
வாடா மச்சான்“
இப்பாடலில் சசிரேகா என்ற நடிகையுடன் இமான் அண்ணாச்சி நடனமாடி கலக்கியிருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் நடித்த அண்ணாச்சி முதல்முறையாக நடனமாடியிருக்கிறார். அந்நடனத்தை பார்த்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் இனிமேல் நடனப்புயல் பிரபுதேவாவும், ராகவா லாரன்சும் இமான் அண்ணாச்சியிடம் நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். இதைபற்றி இமான் அவர்கள் கூறும்பொழுது எனக்குள் இப்படி...