நிச்சயமாக மார்ச் 3 ஆம் தேதி வெளியாகும் குற்றம் 23 திரைப்படம். பிரபு வெங்கடாச்சலம்.
வியாபாரம், வர்த்தகம் மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளில் ஏறக்குறைய 12 வருட கால சிறந்த அனுபவத்தை பெற்று, தற்போது திரையுலகின் வர்த்தக உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கிறார், 'அக்ராஸ் பிலிம்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் பிரபு வெங்கடாச்சலம். முன்னதாக வேறொரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி, தரமான கதையம்சம் நிறைந்த படங்களை மட்டுமே தேர்வு செய்யும் யுக்தியை நன்கு அறிந்து கொண்ட பிரபு வெங்கடாச்சலம், 'டூ மூவி பஃப்ஸ்' நிறுவனத்தோடு கைக்கோர்த்து 'திட்டம் போட்டு திருடற கூட்டம்' படத்தை தற்போது தயாரித்து வருகிறார். அதுமட்டுமின்றி 'கொடி' திரைப்படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை வாங்கி வெளியிட்டது மூலம், விநியோக துறையிலும் கால் பதித்து இருக்கிறார். அந்த வெற்றியை தொடர்ந்து, திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவோடு இணைந்து, 'பறந்து செல்ல வா' படத்தையும் தமிழகத்தில் பி...