Tuesday, August 18
Shadow

Tag: injured

படப்பிடிப்பில் விபத்து நடிகர் விஷால் படுகாயம்

படப்பிடிப்பில் விபத்து நடிகர் விஷால் படுகாயம்

Latest News, Top Highlights
துருக்கியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு நடிகர் விஷாலுக்கு கை, கால்களில் அடிபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஷாலை வைத்து ‘மத கஜ ராஜா’ மற்றும் ‘ஆம்பள’ என இரண்டு படங்களை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. இதில், ‘மத கஜ ராஜா’ இன்னும் ரிலீஸாகவில்லை. இந்தப் படத்தில், விஷால் ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இந்நிலையில், மூன்றாவது முறையாக விஷால் - சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ளது. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்பை 50 நாட்கள் துருக்கி நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்காக வி‌ஷால், தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த வாரம் துருக்கி புறப்பட்டுச் சென்றனர். அங்கு கேப்படோசியாவில் உள்ள மலைப்பகுதியில் வி‌ஷால் வில்லன்களுடன் மோதுவது போன்ற சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ...