அனைத்து கண்களையும், கவனத்தையும் கைப்பற்றிய “இரவுக்கு ஆயிரம் கண்கள்” !
அருள்நிதி, மஹிமா நம்பியார் நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது. கடந்த வார இறுதியில், கடும் போட்டியில் வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' இரும்பு திரையின் இறுக்கமான பிடியையும் உடைத்து வெள்ளித்திரையை தன் வசப்படுத்தியது. மிகவும் புதிரான திரைக்கதையும் தான் அதற்கு ஒரு முக்கிய காரணம். இந்த கிரைம் திரில்லர் படத்தை புத்திசாலித்தனமான திரைக்கதையிக் கொடுத்த இயக்குனர் மு மாறன் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதால் தான் நட்சத்திரங்கள் உருவாகிறார்கள் என்ற நாயகன் அருள்நிதியின் தத்துவத்தை அவரே நிரூபித்திருக்கிறார்.
நல்ல நடிப்பு தான் ஒரு வெற்றிப் படத்தின் உரம் என்றால், இரவுக்கு ஆயிரம் கண்கள் அந்த சிறந்த நடிப்பை அதிகமாகவே கொண்டிருக்கிறது. உயர்ந்த நல்ல மனதை உடைய மஹிமா நம்பியார், மீண்டும் தலையெடுக்கும் சாயா சிங், சக்தி வாய்ந்த ஆனந்...