ஜல்லிக் கட்டு போராட்டத்துக்காக கொம்பைக் கூர் தீட்டும் பாடல் yuva
ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில்
திரைப்பட இணை இயக்குனரும் நடிகரும் பத்திரிகையாளருமான சு. செந்தில் குமரன் எழுதிய இதுதாண்டா ஜல்லிக்கட்டு என்ற கம்பீரமான பாடலை
சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் யூ டியூபில் வெளியிட்டு வாழ்த்தினார் .
சாம் டி ராஜ் இசையில் விஜயலட்சுமி, உத்ய, ஷரவன் ஆகியோர் பாடிய பாடல் இது
இது பற்றி சு. செந்தில் குமரன் கூறும்போது "அன்பையும் அறிவையும் இரண்டு கண்களாகக் கொண்டு உலகிற்கே பண்பாட்டை சொல்லிக் கொடுத்த இனம் தமிழ் இனம் .
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முழக்கத்தின் மூலம் சக மனிதன் மேல் உலகளாவிய நட்பு காட்டிய இனம் தமிழ் இனம் .
விலங்குகளிடத்தில் அதிலும் விவசாயம் மூலம் தனக்கு உதவும் காளை , மாடு உள்ளிட்ட விலங்குகளிடத்தில் அவன் காட்டும் நேசம் கலந்த நன்றியின் நேரிய வடிவமே மாட்டுப் பொங்கல் .
அந்த மாட்டுப் பொங்கலை ஒட்டி தனக்கு வாழ்நாள...
