
ஜெய்க்கு வில்லன்களான தல, தளபதி வில்லன்கள்
'பிரேக்கிங் நியூஸ்' படத்தில் ஜெய் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என்ற அறிவிப்புகள் வெளியான நாளில் இருந்தே அவர் யாருடன் மோதுவார் என்பதை அறியும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வரும் இந்த வேளையில் ராகுல் தேவ் (அஜித்குமாரின் வேதாளம் புகழ்) மற்றும் தேவ் கில் (மகதீரா மற்றும் விஜயின் சுறா புகழ்) ஆகியோர் இந்த படத்தில் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது படக்குழு.
"நிச்சயமாக, சூப்பர் ஹீரோவுக்கு இணையாக சக்திவாய்ந்த சூப்பர் வில்லன்கள் இருக்கும் போது மட்டுமே மோதலின் தீவிரம் மிகவும் கடுமையானதாக இருக்கும். நடிகர் ஜெய்யை நாயகனாக நடிக்க முடிவெடுத்த போதே, எங்கள் அடுத்த வேலை, தோற்கடிக்க முடியாத ஒரு வில்லனை தேடும் படலத்தில் தொடர்ந்தது. நிறைய விஷயங்களை மனதில் வைத்து வில்லனை தேடியபோது, ராகுல் தேவ் மற்றும் தேவ் கில் ஆகியோரை நடி...