
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாணும் தமிழகத்தில் இளைஞர்கள் ஏற்று நடத்தி வரும் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, "ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை ஆகியவற்றை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது, திராவிட கலாச்சாரம் மற்றும் அதன் ஒருமைப்பாடு மீது நடத்தும் தாக்குதல். தென்னிந்தியாவில் இப்படித்தான் இது பார்க்கப்படுகிறது. பொள்ளாச்சியில் நான் படப்பிடிப்பில் இருக்கும்போது மக்கள் இதனால் காயப்பட்ட...