மக்கள் போராட்ட களத்தில் சந்தானம் சந்தோஷத்தில் பிரியாணி விருந்து
மொழி... பாரம்பரியம்... கலாச்சாரம்... என ஒரே உணர்வோடு உலகம் முழுதும் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் அறவழி போராட்டங்களை நடத்தி உலகத்திற்கே தீர்வுக்கு புது பாதையை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்...
இப்படி ஊரே கொந்தளிந்து கொண்டிருக்கிறது.
பூந்தமல்லி அருகேயுள்ள EVPயில் நடிகர் சந்தானம் தன் பிறந்த நாளை பிரியாணி விருந்துடன் மதியம் கொண்டாடுகிறார்.
நேற்று இந்த நடிகர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்... அந்த போராட்டம் வெறும் நாடகம் என்பதை இன்றைய பிரியாணி விருந்து நிருபிக்கிறது.
உண்மையான தமிழனாக இருந்தால்... உணர்வோடு இருந்தால் பிறந்த நாளையே கொண்டாடாமல் தவிர்த்திருக்க வேண்டாமா...
அல்லது பிரியாணி விருந்தை மெரீனாவில் போராடும் இளைஞர்களோடு தானே நடத்தியிருக்க வேண்டும்.
பொது வெளியில் நடிப்பை தவிருங்கள் மிஸ்டர் சந்தானம்
இங்கு லட்சகணக்கான மாணவர்கள் போராடி வருகிறார்கள் அவர்களுக்கு இதுவரை எந்...
