
கதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் – நிதின் சத்யா!
வணிகத்தில் 'சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்' என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத்துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை உண்டு. ஆனால், இந்த கட்டுக்கதை, பலமான கதையை கொண்ட திரைப்படங்களால் உடைத்தெறியப்பட்டதை பார்த்திருக்கிறோம். உண்மையில் சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என நம்புகிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.
இது குறித்து அவர் கூறும்போது, "இது ஒரு தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை தாண்டி, சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில் ஜருகண்டியும் நிச்சயம் இணையும். முதலில், சமீபமாக நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி, ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனித்துவமான கதைகளை ரசி...