ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?
தமிழ் சினிமா நடிகைகளில் அதிகபட்டமாக எந்திரன் படத்தில் நடித்தற்காக நடிகை எமி ஜாக்சன் 2 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். இதுவே நடிகைகளில் அதிகபட்ச சம்பளமாக இருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று நடிக்க உள்ள கங்கனா ரனாவத், சம்பளத்தில் விஷயத்தில் எமி ஜாக்சனை முந்தியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாராகி வந்தனர் . பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் இப்படத்தை எடுக்கத் திட்டமிட்டனர்.
ஆனால் கடைசியாக ஏ.எல் விஜய் இப்படத்தை இயக்க முடிவெடுத்து அறிவித்தார். இப்படத்தில் நடிகைகள் தேர்வு நெடுநாட்களாக பேசப்பட்டு வந்தநிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கவிருப்பதாக அவரது பிறந்தநாளன்று அறிவித்தனர். இப...

