ரீயூனியன் பயணம்… எதிர்பாராத திருப்பங்கள்… ஷிவானி செந்திலின் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகிறது!
ரீயூனியன் பயணம்... எதிர்பாராத திருப்பங்கள்... ஷிவானி செந்திலின் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகிறது!
சென்னை:
'கார்கில்', 'டேக் டைவர்ஷன்' போன்ற திரைப்படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஷிவானி செந்தில், தனது அடுத்த படைப்பை முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கி வருகிறார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஷிவானி ஸ்டுடியோஸ் சார்பில் இந்தப் படத்தை எழுதி, இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
தொடர்ந்து புதிய முயற்சிகளில் கவனம் செலுத்தி வரும் ஷிவானி ஸ்டுடியோஸ், இதற்கு முன்பு 15 திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது உருவாகி வரும் இந்தப் புதிய திரைப்படம், இளைஞர்கள் முதல் குடும்ப ரசிகர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
திரைப்படத்தின் கதை, பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி நண்பர்கள் நால்வர் ஒன்று சேர...
