ஜிகர்தண்டா 2 X – திரைவிமர்சனம் (சுவைக்கலாம்) Rank 3.5/5
ஜிகர்தண்டா 2 X - திரைவிமர்சனம் (சுவைக்கலாம்)
ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்
தயாரித்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இன்று வெளியாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் x படத்தின் விமர்சனத்தை இதில் காணலாம்.
படத்தின் கதை
மதுரையில் பெரிய தாதாவாக இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இவரை ஒரு ஹீரோ, கருப்பாக இருக்கும் நீ எப்படி ஹீரோ ஆக முடியும் என்று கேட்கிறார். இதனால் தான் ஹீரோவாக வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். இதற்காக இயக்குனர் ஒருவரை தேடி வருகிறார்.
சென்னையில் போலீ...