
ஜோ – திரைவிமர்சனம் (சினேகிதன்) Rank 3.5/5
ஜோ - திரைவிமர்சனம் (சினேகிதன்) Rank 3.5/5
அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ, மாளவிகா மனோஜ், பாவ்யா உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “ஜோ”.
முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ஜோ நீண்ட நாளுக்கு பிறகு வரும் காதல் படம் என்று சொன்னால் மிகையாகாது. சரி படம் நமக்கு காதலை தருகிறதா இல்லை சோதிக்கிறதா என்று பார்ப்போம்.
ஜோ’வாக படத்தில் வருபவர் ஹீரோ ரியோ. பள்ளி பருவத்தில் ஆரம்பமாகிறது படத்தின் கதை. நண்பர்களுடன் ஜாலியாக இருந்து தனது பள்ளி பருவத்தை முடித்து கல்லூரிக்குள் நுழைகிறார்.
அதே நண்பர்களுடன் ஆட்டம், கொண்டாட்டமாக இருக்க நாயகி மாளவிகாவை காண்கிறார். கண்டதும் காதல் வயப்படுகிறார். தொடர்ந்து மாளவிகாவின் பின்னால் சுற்றி சுற்றி, ஒரு தலை காதலை இருதலை காதலாக மாற்றுகிறார் ரியோ.
கல்லூரி வாழ்க்கை முடிந்து ந...