
அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஜோஸ்னா சின்னப்பா
சினிமாவில் ஹீரோயின்களாக இருக்கும் பெரும்பாலானோருக்கு, அஜித்துடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவர் ஹேண்ட்சமாக இருக்கிறார் என்பதைத் தாண்டி, நல்ல மனிதர் என்ற அடையாளமும் அவரை உயர்த்தி வைத்திருக்கிறது.
எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவில் ஜெயித்தவர் அஜித் என்பதும் கூடுதல் பலமாக இருக்கிறது. இந்நிலையில், பிரபல ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையான ஜோஸ்னா சின்னப்பாவிடம், சினிமாவில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர், “சினிமாவில் நடிப்பது குறித்து நான் இன்னும் யோசிக்கவில்லை. அதுபற்றிய ஐடியாவே இப்போது இல்லை. ஒருவேளை சினிமாவில் நடிக்க வந்தால், அஜித்துடன் ஒரு படம் நடிக்க வேண்டும். அவருடைய நல்ல குணம் எனக்குப் பிடிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்
இதை பிரபல இணைய தளம் பெட்டியில் கூறியுள்ளார்...