ஓவியா ரசிகர்களை சீன்டிபார்க்கும் ஜூலி !
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் ஓவியா மற்றும் ஜூலி நல்ல நட்புடன் தான் இருந்தார்கள் ஜூலி பண்ண ஒரு சில விஷமத்தால் ஓவியா கடுப்பாகி அவரிடம் இருந்து விலகினார். இந்த பிரச்சனை பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இன்னும் தொடர்கிறது என்று தான் சொல்லணும்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலமாக, ஜல்லிக்கட்டு போராளி என்று பெயர் எடுத்த ஜுலி, ரசுகர்களின் கோபத்திற்கு ஆளாவனர், தற்போதும் சில தவறுகளை செய்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார்.
தற்போது அவருக்கு பிரபல தொலைக்காட்சியில் சுட்டீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் ஜுலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை போட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் ஏன் ஓவியாவை காப்பியடிக்கிறார், என்று கூறி வருவதோடு, ஜுலியை கலாய்த்தும் வருகிறார்கள்....