
பொருளாதார பிரச்சினையில் தவிக்கும் நடிகர் பிஎஸ் வீரப்பா மகன்… தேடிச் சென்று நிதி உதவி செய்த கலைப்புலி தாணு!
பிஎஸ் வீரப்பாவை நினைவிருக்கிறதா... மகாதேவி, மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், மீனவ நண்பன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் கம்பீர வில்லனாக வந்து பின், பிஎஸ்வி பிக்சர்ஸ் என்ற பேனரில் ஆந்த ஜோதி, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, நட்பு உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர்.
பிஎஸ்வி பிக்சர்ஸ் பேனரில் வெற்றி, சபாஷ், சாட்சி உள்பட அடுத்தடுத்து 4 படங்களை இயக்கியவர் இன்றைய டாப் ஸ்டார் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரப்பாவின் மகன் பிஎஸ்வி ஹரிஹரன். இவரும் தயாரிப்பாளர்தான். ஆனால் பிஎஸ் வீரப்பாவின் மறைவுக்குப் பிறகு, படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.
ஏராளமான படங்களில் நடித்துச் சம்பாதித்த பணத்தை, படத் தயாரிப்பில் இழந்துவிட்டார் வீரப்பா. இப்போதும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் வீரப்பாவின் மகன் பிஎஸ்வி ஹரிஹரன். பொருளாதாரப் பிரச்சினை காரணமாக வாடகையைக் கூடச் செ...