
நானும் விமலும் இணைந்தாலே அது வெற்றி தான் ; களவாணி 2 வெற்றிக்கு நன்றி கூறிய சற்குணம்..!
பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி திரைப்படம். அந்த படத்தின் இயக்குனர் சற்குணம், நாயகன் விமல் மற்றும் நாயகி ஓவியா ஆகியோருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.. அதுமட்டுமல்ல அந்த படத்தில் நடித்த பல நடிகர், நடிகைகளுக்கும் அந்த படம் மிகப்பெரிய புகழ் வெளிச்சம் தந்தது..
இந்த நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த வாரம் களவாணி 2 திரைப்படம் அதே சற்குணம், விமல், ஓவியா என்கிற கூட்டணியில் உருவாகி மீண்டும் ஒரு வெற்றியை ருசித்துள்ளது.
முதல் பாகத்தில் இடம்பெற்ற இளவரசு, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு மற்றும் இந்த படத்தில் புதிதாக சேர்ந்துள்ள துரை சுதாகர், ராஜ்மோகன், விக்னேஷ் காந்த் என கலகலப்பான கதாபாத்திரங்களுடன் மக்களுக்கு மீண்டும் ஒரு விருந்தை பரிமாறி உள்ளது களவாணி 2.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு கூட்டம் ந...