
ஜெயலலிதாவின் மறைவுக்கு கமல் போட்ட சர்ச்சை ட்வீட்
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேற்றிரவு 11.30 அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் கட்சி தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வந்த வண்ணம் உள்ள நிலையில் அம்மையாரின் மறைவுக்கு நடிகர் கமலஹாசன் போட்ட ட்வீட் சர்ச்சையை சந்தித்துள்ளது.
அந்த ட்வீட் ல் அவர் ஜெயலலிதாவின் பெயரை குறிப்பிடாமல் “சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என குறிப்பிட்டுள்ளார். ஒரு மாநிலத்தின் தலைவரை இழந்த நிலையில் கமல் மரியாதையில்லாமல் போட்ட ட்வீட் ரசிகர்களும், மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தது, கடந்த ஆண்டு வெள்ளம் பாதித்த நேரத்தில் ஆங்கில மீடியாவுக்கு கமல் அளித்த பேட்டி ஆட்சியாளர்களை கோபத்தில் தள்ளியது.
அப்போதைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கமலை கண்டித்து பெரிய அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும். இதையெல்லாம் மனதில் வ...