
ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை பிறந்த நாளில் தனி கட்சி அறிவிப்பு வருமா?
விரைவில் அரசியலுக்கு வர உள்ள நடிகர் கமல்ஹாசன், ரஜினி போல சொல்லாமல் செயலில் இறங்கியுள்ளதால், அவருக்கு திரைத்துறையினர் பலர் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று சற்று நேரத்திற்கு முன்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாதத்தில் தனது அரசியல் கட்சி குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட உள்ள கமல்ஹாசன், அதற்காக தான் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது....