முறைப்படி அழைத்தும் மோடி நிகழ்ச்சிக்கு கமலும், விஷாலும் வராதது ஏன்?
நேற்று முன்தினம் நடந்த தினத்தந்தி பவள விழாவுக்கு ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் முறைப்படி அழைக்கப்பட்டும் கலந்துகொள்ளாதவர்கள் இரண்டு பேர். ஒருவர் கமல்ஹாசன். இன்னொருவர் விஷால்.
கமல்ஹாசன் இப்போதுதான் இந்து தீவிரவாதம் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். மத்திய மாநில அரசுகளை எதிர்த்து அரசியல் பேசி வருகிறார். எனவே இந்த நேரத்தில் விழாவுக்கு சென்று மோடியைச் சந்தித்தால் அது இன்னும் சர்ச்சையாக்கப்படும் என்று நினைத்திருக்கலாம்.
இன்னொன்று பாஜக தான் கமலை இயக்குகிறது என்ற வதந்தியை பொய்யாக்கவே கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள். அதேபோல் திரையுலகின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள விஷால் வருவதாக இருந்து கடைசி நேரத்தில் கேன்சல் ஆனது. விஷால் சமீபத்தில் பாஜக தலைவர் எச்.ராஜாவுடன் மோதினார். கமலை விஷால் ஆதரிக்கப் போவதாக செய்தி வருகிறது. எனவே கமல் சொல்லி விஷால் விழாவுக்கு செ...
