Monday, December 6
Shadow

Tag: #kana #sathyaraj #aishwaryaraj #sivakarthikeyan #arunrakakamaraj

கனா படத்தின் “பின்னணி இசை எனக்கு  மிகப்பெரிய சவால் – இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்

கனா படத்தின் “பின்னணி இசை எனக்கு மிகப்பெரிய சவால் – இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ்

Latest News, Top Highlights
மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் இன்ஸ்புரேஷனல் படமான 'கனா'வை பெரிய திரைகளில் பார்க்கும் முன்பே, அதன் இசையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அருமையான 'வாயாடி பெத்த புள்ள' 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. 'ஊஞ்சலா ஊஞ்சலா' மற்றும் 'சவால்' ஆகியவை எழுச்சியூட்டும் கீதமாக அமைந்துள்ளன. "எங்களின் முதல் யோசனை, படத்தின் கதைக்கு அப்பால் அனைத்து தரப்பினரையும் கவரும் ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்பது தான். இது ஒன்றும் யாரும் சிந்திக்காத ஒரு யோசனை கிடையாது. கடந்த காலங்களில் சில ஊக்க பாடல்கள் வந்திருக்கின்றன, அந்த படத்தின் தலைப்புகள் மறந்து போன பின்னரும் கூட அத்தகைய பாடல்கள் எல்லோருடைய மனதிலும் தொடர்ந்து நிலைத்திருக்கின்றன. அந்த மாதிரி ஒரு பாடலை கொண்டு வர விரும்பினோம்" என்றார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். மேலும், அவர் தொடர்ந்து கூறும்போது, "ஊஞ்சலா ஊஞ்சலா' மற்றும் 'சவால்' ஆகிய பா...
சினிமா தெரிந்த படைப்பாளி இயக்குனர் அருண் ராஜா காமராஜ்  சத்யராஜ் பாராட்டு

சினிமா தெரிந்த படைப்பாளி இயக்குனர் அருண் ராஜா காமராஜ் சத்யராஜ் பாராட்டு

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படம் ‘கனா’. அவருடைய கல்லூரித் தோழரும், நடிகர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்கள் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டராக ஆக விரும்பும் மகளுக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சத்யராஜ், “படம் நன்றாக இருந்தால் மக்களே படத்தைக் கொண்டு சேர்ப்பார்கள். அதைப் புகழ்ந்து பேசி பயனில்லை. கிரிக்கெட் தெரியாமல், அதை கற்றுக்கொண்டு நடிப்பது மிகப்பெரிய சவால். ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறார். சினிமா தெரிந்த ஒரு படைப்பாளி ஜெயிக்கும்போது அது சினிமாவுக...
சிவகார்த்திகேயன் ஊக்கமும் ஐஸ்வர்யா ராஜேஷ் உழைப்பு கனா படத்தை இயக்க எனக்கு பலத்தை கொடுத்தது – அருண் ராஜா காமராஜ்

சிவகார்த்திகேயன் ஊக்கமும் ஐஸ்வர்யா ராஜேஷ் உழைப்பு கனா படத்தை இயக்க எனக்கு பலத்தை கொடுத்தது – அருண் ராஜா காமராஜ்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கனா எங்கள் பேனரில் நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு படத்தையும் பட்ஜெட்டில் எடுத்தால் தான் அது தயாரிப்பாளருக்கு சரியாக அமையும். இந்த படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், எங்களுக்கு கிடைத்த வரம். சின்ன படமாக இருந்த இந்த கனா, சத்யராஜ் சார் நடிக்க உள்ளே வந்தவுடன் பெரிய படமாகி விட்டது. சத்யராஜ் சாரை எல்லோரும் கட்டப்பா என்று தான் அழைக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு முருகேசன் என்று எல்லோரும் அழைப்பார்கள் என நம்புகிறேன். விளையாட்டே தெரியாமல் ஒரு கிரிக்கெட் வீராங்கணையாக ஐஸ்வர்யா ராஜ...
கனா படத்தில் பணிபுரிந்த்தை பெருமையாக நினைக்குறேன் –  ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்

கனா படத்தில் பணிபுரிந்த்தை பெருமையாக நினைக்குறேன் – ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்

Latest News, Top Highlights
ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் பல்வேறு வகையான படங்களை எடுத்து ரசிகர்களை மிரள வைத்தாலும், அதில் மிகப்பெரிய பாராட்டு ஒளிப்பதிவாளர்களையே சாரும். குறிப்பாக, தினேஷ் கிருஷ்ணன் போன்ற ஒரு மாயாஜால வித்தைக்காரர், பல்வேறு வகை திரைப்படங்களில் வெவ்வேறு வகையிலான வண்ணங்களை சிறப்பாக கையாண்டு, தன் தனித்துவமான திறன்களை நிரூபித்தவர், கனா எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது என்று கூறுகிறார். குறிப்பாக, கனாவின் காட்சி விளம்பரங்களில் கேமரா கோணங்கள் மற்றும் டோன்களின் மாறுபாடுகளை பார்க்கலாம். இந்த படத்தின் கதையே இரண்டு வெவ்வேறு பின்னணிகளில் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று கிராமப்புற பின்னணி, மற்றொரு கிரிக்கெட் மைதானம் இவை இரண்டுமே ஒளிப்பதிவாளருக்கு வேலைப்பளுவை அதிகமாக்கியிருக்கிறது. கிரிக்கெட் ஸ்டேடிய காட்சிகள் தொழில்முறை கேமரா குழுவினர் உதவியுடன் மல்ட்டி கேமரா செட் அப் மூலம் படமாக்கப்பட்டது. கிரிக்கெட் பந்தின் சின்ன அசைவ...
சிவகார்த்திகேயனின் தோற்றம் கனா படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது -அருண் ராஜா காமராஜ்

சிவகார்த்திகேயனின் தோற்றம் கனா படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ளது -அருண் ராஜா காமராஜ்

Latest News, Top Highlights
'கனா' அதன் பாடல்கள் மற்றும் காட்சி விளம்பரங்களின் மூலமே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. குறிப்பாக,  சிவகார்த்திகேயன் ஒரு புதிய தோற்றத்தில் திரையில் தோன்றியது, அதன் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாரோ என்ற சில அனுமானங்கள் உண்டு, ஆனால் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அந்த விஷயங்களை பற்றி கூறி, நம்மை  ஆச்சரியப்படுகிறார்.சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் மிக முக்கியமான  கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார் என்பது தான் உண்மை. சிவகார்த்திகேயன் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என விரும்புபவர். என் இயக்குனர் 'கனா'வை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன், தான் ஒரு தயாரிப...
50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்!

50 மில்லியன் பார்வைகளை கடந்த வாயாடி பெத்த புள்ள பாடல்!

Latest News, Top Highlights
கலையுலகில் ஒரு சில படைப்புகள் தான் விமர்சனங்களை எல்லாம் கடந்து மிகவும் நெருக்கமாக ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும். உள்ளன. குறிப்பாக, உறவுகள், பிணைப்பு, உணர்வுகள் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பாடல்கள் எப்போதுமே மனதில் தங்கி விடும். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் தர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள கனா படத்தின் 'வாயாடி பெத்த புள்ள" பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. "சில நேரங்களில், நாம் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அப்படி வாயடைத்து போகும் அளவுக்கான அன்பை இசையின் காதலர்கள் மற்றும் ரசிகர்கள் வாயாடி பெத்த புள்ள பாடலுக்கு வழங்கியிருக்கிறார்கள். தந்தை, மகள் உறவையும், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் சொல்லும் இந்த பாடல் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மற்றும் பாடலாசிரியர் ஜி.கே.ப...
கனா படத்தில் மெகானிக்காக வரும் சிவகார்த்திகேயன்

கனா படத்தில் மெகானிக்காக வரும் சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் சென்னை திரை மூலம் தமிழ் சினிமாவில் காலடி வயித்து இன்று தமிழ் சினிமாவின் முன்னை நடிகராக திகழ்பவர் என்றால் அது சிவகார்த்திகேயன் அதுவும் ஒரு குறுகிய காலத்தின் இந்த இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். சினிமாவில் சம்பாதித்தால் மட்டும் போதாது என்று நல்ல படங்களை நானும் தயாரிப்பேன் என்று தற்போது தயாரிப்பாளராக மாறி உள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படம் கனா. இதனை அவரது நண்பரும், பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் உள்பட பலர் நடித்துள்ளனர். சிபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் ஒரு கிராமத்து பெண்ணின் கதை இது. அந்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அவரது தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார்....
கனா இசை வெளியீட்டு விழாவில்  அடுத்த பட தயாரிப்பை அறிவித்த சிவகார்த்திகேயன்

கனா இசை வெளியீட்டு விழாவில் அடுத்த பட தயாரிப்பை அறிவித்த சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
நடிகர் சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் துவங்கியிருக்கும் பட நிறுவனம் சார்பில் முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் 'கனா'. பெண்கள் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் இந்த படத்துக்கு சிவகார்த்திகேயன் மற்றும் அருண்ராஜாவின் நண்பரும், மரகத நாணயம் புகழ் திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகபிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் டி இமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். மேலும், பெண்கள் கிரிக்கெட் மையமாக வைத்து படம் எடுக...
கனா படத்துக்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்!

கனா படத்துக்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை பாடிய அனிருத்!

Latest News, Top Highlights
மரகத நாணயம் படத்தின் இசை மூலம் எல்லோருடைய இதயத்தையும் கவர்ந்த இளம் இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ்,பிரபல இசை அமைப்பாளர் அனிருத்தின் குரலில் " கனா" படத்தில் ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார். "அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்த பாடலை பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது. அந்த பாடல் பதிவின் முழு அமர்விலும் எங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றியது, அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது "என்கிறார் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கனா' படத்திற்காக ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை உருவாக்கியிருக்கிறார் திபு. "நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சித்தோம். வழக்கமாக, பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களி...
CLOSE
CLOSE