கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை – யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.
மாபெரும் வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து கார்த்தி , ரகுல் பிரீத்சிங் வெற்றி ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள் .
மேலும் பிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , RJ விக்னேஷ் , அம்ருதா , ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள் . இவர்களுடன் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார்.
இப்படம் மூலம் ரஜத் ரவிசங்கர் டைரக்டராக அறிமுகமாகிறார். கதை திரைக்கதை, வசனம் எழுதும் இவர் ,"எங்கேயும் எப்போதும்" இயக்குநர் சரவணன் , ,பிரபல இந்தி இயக்குநர் அனுராக்காஷ்யப் ,
இயக்குநர் R.கண்ணன் இவர்களுடன் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.
பெயரிடப்படாத “ கார்த்தி 17’’ படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க - பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கிறார் .இவர், சூர்யா நடித்த சூப்பர் ஹிட்டான :சிங்கம்2” படத்தை தயாரித்தவர் .தற்போது விரைவில் வெளியாக இருக்கும் திரிஷா ...
