‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ப்ரணிதா சரியான அலட்டல் பேர்வழி தான் இயக்குனர்
‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ இந்த படத்தில் ஜெய், காளி வெங்கட், கருணாகரன் ப்ரணிதா, நவீன், தம்பிராமையா, பிரியங்கா, சூப்பர் குட் சுப்பிரமணி மற்றும் பலர் நடிப்பில் மகேஷ் முத்துசாமி ஒளிபதிவில் சந்தோஷ் தயாநிதி இசையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா நேற்று மாலை நடந்தது இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் படத்தை பற்றி பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
காதல் தோல்வியடைந்த ஒருவனுக்கு நண்பர்களாக இருக்கும் மூன்று பேர், அவனால் படுகிற அவஸ்தைகள்தான் இந்தப்படத்தின் கதை. பெரிசா கதை இல்ல. ஆனால் தியேட்டருக்கு வந்தா இரண்டரை மணி நேரம் விழுந்து விழுந்து சிரிச்சுட்டு போகலாம் என்ற மகேந்திரன், சந்தானத்தின் சிஷ்யன். படத்தில் எல்லா தொலைக்காட்சிகளில் வரும் முக்கிய நிகழ்ச்சிகளையும் கிண்டலடித்திருக்கிறாராம். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையும் விட்டு வைக்கவில்லை.
படம் திரைக்கு வரும்போது ...

