Friday, May 15
Shadow

Tag: #Karuppu #Suriya #RJBalaji #Trisha #KaruppuReview #KaruppuMovie #SuriyaFans #Kollywood #TamilCinema #DreamWarriorPictures #SaiAbhyankkar #TamilMovieReview #MassMovie #ActionThriller #CourtroomDrama

கருப்பு – திரை விமர்சனம். (மாஸ், மிரட்டல், மாயம் கலந்த சூர்யாவின் அதிரடி ஆட்டம்!)

கருப்பு – திரை விமர்சனம். (மாஸ், மிரட்டல், மாயம் கலந்த சூர்யாவின் அதிரடி ஆட்டம்!)

Latest News, Review
கருப்பு – மாஸ், மிரட்டல், மாயம் கலந்த சூர்யாவின் அதிரடி ஆட்டம்! கடவுள் மனித உருவில் வந்து அநியாயத்திற்கு எதிராக போராடினால் எப்படி இருக்கும்? அந்த கேள்விக்கான வணிக ரீதியான பதில்தான் கருப்பு. ஒரு நகரத்தின் நீதிமன்றம், காவல்துறை, அரசியல் என அனைத்தையும் பணத்தால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சக்திவாய்ந்த வக்கீல். அவனுக்கு எதிராக சாதாரண மனிதர்கள் போராட முடியாத சூழலில், “கருப்பு” என்ற சக்தி களமிறங்குகிறது. இதை முழுக்க முழுக்க மாஸ் ஆக்ஷன் மொழியில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். படத்தின் பெரிய ஆச்சரியம் ஆர்.ஜே பாலாஜி. இதுவரை நகைச்சுவை, சமூக கருத்து என்று வந்தவர், இதில் முழுக்க நெகட்டிவ் ஷேடில் தோன்றுகிறார். ஆரம்பத்தில் அந்த தோற்றம் புதிதாகத் தோன்றினாலும், கதையோடு சேர சேர அவரது நடிப்பும் செட்டாகி விடுகிறது. குறிப்பாக நீதிமன்ற அரசியலை அவர் கையாளும் விதம் கவனம் பெறுகிறது. ...