ரஜினிகாந்தை சரமாரி தாக்கும் பிரபல நடிகை
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை- தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழிசை பயணம் செய்த போது சோபியா என்ற மாணவி பாசிச பாஜக அரசு ஒழிக என்று கோஷமிட்டார். இதையடுத்து தமிழிசையின் புகாரின்பேரில் சோபியா கைது செய்யப்பட்டார்.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்களும் மாணவர் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் தமிழகத்தில் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி வி ரமணா ஆகியோர் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தியது. இதையடுத்து தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
விரைவில் கட்சியை தொடங்கும் ரஜினிகாந்த் இப்படி பட்டும் படாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ந...
