பொதுவுடைமைக் கருத்தில் கலைப்படைப்பு செய்து மனித சமத்துவத்தை பேசியவர் இயக்குநர் ஜனநாதன் – கவிபாஸ்கர்
1953 இல் தஞ்சை மாவட்டம் – வடசேரி எனும் ஊரில் பிறந்தவர் இயக்குநர் ஜனநாதன். பொதுவுடைமை அரசியலை கலைவடிவத்தில் வார்த்தெடுத்த ஆகச்சிறந்த திரை ஆளுமை இயக்குநர் ஜனநாதன் அவர்கள்.
தனது முதல் படைப்பாக ”இயற்கை” எனும் காதல் காவியத்தை படைத்த இயக்குநர் ஜனநாதன், இயற்கை எய்திவிட்டார் எனும்போது மனம் படபடத்து உலக்கிவிட்டது. சில நாட்களாக சிறந்த திரை ஆளுமைகளெல்லாம் நம்மை விட்டு பிரியும் போது ஏதோ ஒருவித பயம் நம்மை சூழ்ந்து நிற்கிறது.
இலாபம், என்ற திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இயக்குநர் ஜனநாதன் அவர்களுக்கு 2 நெஞ்சாங்குலை தாக்குதலோடு, மூளையில் குருதிக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மருத்துவம் பலனளிக்காமல் இன்று 14.03.2021 அன்று மரண மடைந்தார்.
இயக்குநர் ஜனநாதன் அவர்கள் “இயற்கை, பேராண்மை, ஈ, புறம்போக்கு உள்ளிட்ட படங்களின் ஊடாக வலுவான சமூக்கருத்தியலை மக்கள் ...
