
கவிஞருக்கு ஆட்டோ பரிசளித்த கஞ்சா கருப்பு..!
நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருபவர். அப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல் நடத்தி வருபவருமான ஜெயங்கொண்டானின் உணவகத்துக்கு, ஒரு 'ஆட்டோ'வை அன்பளிப்பாக அளித்துள்ளார்.. அதன் பின்னணியில் நெகிழ்வான ஒரு காரணமும் உண்டு.
திருட்டு விசிடியில் படம் பார்க்காமல், காசுகொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு பில் தொகையில் 10ரூ சலுகை, உதவி இயக்குனர்களுக்கு பாதிவிலையில் சாப்பாடு, வெளியூரில் இருந்து சினிமாவே கதியென தஞ்சம் பிழைக்க வந்து கையில் காசில்லாமல் வருவோருக்கு கூட பல சமயங்களில் இலவச சாப்பாடு என சேவை மனப்பான்மை கலந்து இந்த கவிஞர் கிச்சன் செயல்பட்டு வருகிறது.
இந்த ஹோட்டலுக்கு தேவையான காய்கறிகளை தினசரி கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வருவதற்காக வாடகை வாகன...