ஹிந்திக்காக தன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் குறைந்த காலத்தில் மிக பெரிய இடத்தை பிடித்தவர் என்றால் அது கீர்த்தி சுரேஷ் அவர் தமிழ்மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் என் மூன்று மொழிகளில் தன்னை முன்னிலை படுத்தியுள்ளார். இந்த வெற்றியின் அடுத்த கட்ட முயர்ச்சியாக இவர் ஹிந்திக்கு தன் கால் தடம் பதிக்கிறார்.
தமிழ்ப்படங்களில் நடித்து வந்த தமன்னா, ரெஜினா, ரகுல்பிரீத் சிங் உள்ளிட்ட சில நடிகைகள் தற்போது பாலிவுட்டிலும் கொடியேற்றி வருகிறார்கள். அவர் களைத் தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேசும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.
அஜய்தேவ்கானின் மனைவியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதையடுத்தும் சில படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளாராம். தமிழ், தெலுங்கு படங்களில் கவர்ச்சி விசயத்தில் கோடு போட்டே நடித்து வந்துள்ள கீர்த்தி சுரேஷ், ஹிந்தி ரசிகர்களின் ரசனையை கருத்தில் கொண்டு கவர்ச்சிக் கதவுகளையும் திறந்து விட்டிருக்கிறாரா...