
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பாம்பு சட்டை’.
பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரை வைத்துத்தான் படத்தை பப்ளிசிட்டி செய்து வருகிறார்கள். புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் அஜீஷ் அசோக் இதில் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் இப்படத்தை வரும் டிசம்பர் 23-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். அதேநாளில் சூர்யாவின் S3 படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....