
கீர்த்தி சுரேஷை இனி கையில் பிடிக்க முடியாது தளபதி விஜய் என்ன சொன்னார் தெரியுமா
நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி கணேசனாக நடிக்க கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்தபோதே பலரும் இயக்குனர் நாக் அஸ்வினை பார்த்து சிரித்தார்கள். போயும் போய் கீர்த்தி சுரேஷா, வேறு நடிகையே கிடைக்கவில்லையா என்றார்கள்.
நாக் அஸ்வின் யார் பேச்சையும் கேட்கவில்லை. கீர்த்தி சுரேஷை சாவித்ரியாக நடிக்க வைத்தே தீர்வேன் என்று உறுதியாக இருந்தார்.
நடிகையர் திலகம் படத்தை பார்த்தவர்களால் அவர்களின் கண்களையே அவர்களால் நம்ப முடியவில்லை. காரணம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அசத்திவிட்டார். கீர்த்தியா இது இல்லை சாவித்ரியா என்று கேட்கும் அளவுக்கு நடித்துள்ளார்
இத்தனை நாள் இந்த நடிப்பை எல்லாம் எங்கே வச்சிருந்தீங்க கீர்த்தி என்று கேட்கும் அளவுக்கு நடித்திருக்கிறார். தனக்கு நடிக்க வராது என்று கூறி மற்றவர்கள் கேலியாக சிரித்ததை சவாலாக எடுத்துக் கொண்டு இந்த படத்தில் நடித்துக் காட்டியுள்ளார்.
நடிகையர் திலகம் படத்த...