
பயில்வான் மூலம் அசத்த வரும் கிச்சா சுதீப் !
இந்திய அளவில் பிரபலமான நடிகர் கிச்சா சுதீப் தனது சினிமா வாழ்க்கையின் முக்கியமான “பயிலவான்” படத்துடன் இந்த செபடம்பர் மாதம் 12ம் தேதி திரையரங்குகளை கலக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இப்படத்தை பற்றி கிச்சா சுதீப் பெருமையுடன் பகிர்ந்து கொண்டது...
“பயில்வான்” படத்தில் நடித்தது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். கதாப்பாத்திரத்திற்காக ஒரு ஒழுங்கை தொடர்ச்சியாக கடைப்பிடித்தது எனக்கு மிகவும் கஷ்டம் வாயந்ததாக இருந்தது. இப்படத்தின் கதையை முதன் முதலில் கிருஷ்ணா கூறியபோது நான் அதன் மீது விருப்பமற்றே இருந்தேன். ஏனெனில் அந்த நேரத்தில் ஜிம்மையே நினைத்துப் பார்க்காத ஒருவனாக நான் இருந்தேன். மற்ற நடிகர்கள் போல் நான் ஒன்றும் ஃபிட்னெஸ் ஃப்ரீக் கிடையாது. உடற்கட்டுக்காக மெனக்கெடும் இப்படத்தின் பாத்திரத்தை ஏற்பது எ...