22 குழந்தைகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘ஸ்கூல் பஸ்’ – முக்கிய கதாபாத்திரத்தில் கிச்சா சுதீப்!
22 குழந்தைகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் ‘ஸ்கூல் பஸ்’ – முக்கிய கதாபாத்திரத்தில் கிச்சா சுதீப்!
தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநரும் நடிகருமான பி. சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஸ்கூல் பஸ்’. இப்படத்தில் கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமூகக் கருத்துகளையும் மனித உணர்வுகளையும் தனது திரைப்படங்களின் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்து வரும் சமுத்திரக்கனி, இந்தப் படத்தையும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கி வருகிறார்.
22 குழந்தைகளின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை!
22 குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவர்களின் அன்றாட வாழ்க்கையுடன் பயணிக்கும் பள்ளிப் பேருந்து ஓட்டுநரை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உலகம், அவர்களின் எதிர்பார்ப்புகள், ப...
