கிடா – திரைவிமர்சனம் (தரமான சம்பவம் ) Rank 4/5
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘கிடா’.
இப்படத்தில், பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் பல போராட்டங்களை தாண்டி தான் திரைக்கு வருகிறது பல போராட்டங்கள் இருந்தாலும் பல சர்வ தேசிய திரை விருதுகளை வாங்கி தான் இந்த படம் திரைக்கு வருகிறது.
கதைப்படி,
மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள் பூ ராம், அவரதுமனைவி மற்றும் இவர்களது பத்து வயது மதிக்கத்தக்க பேரன் மாஸ்டர் தீபன்.
தென்னை ஓலையில் கீற்று நெய்து அதில் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். தீபாவளி தினம் நெருங்குகிறது. தனது பேரன் சுமார் 2000 ரூபாய் மதிக்கத்த உடை ஒன்றை...
