“பிழைகள் மூலமாக தான் புதிய சிந்தனைகள் பிறக்கின்றது..இயக்குநர் பார்த்திபன்.
ஒரு திரைப்படத்தை பார்த்து பார்த்து, எந்த வித பிழையும் இல்லாமல் உருவாக்கும் பல இயக்குநர்கள் மத்தியில், பிழைகளை கொண்டே ஒரு திரைப்படத்தை உருவாக்கும் உன்னதமான படைப்பாளி, இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவருடைய இயக்கத்தில், சாந்தனு பாக்கியராஜ் மற்றும் பார்வதி நாயர் நடிப்பில் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாகும் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம் அதனை உறுதிப்படுத்தும்
"புதுமையான சிந்தனைகள், புது புது எண்ணங்கள், கறபனைகள் என இவை யாவும் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக திகழ்வது, நாம் செய்யும் சிறு சிறு பிழைகள் தான். என்னுடைய கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படமும் ரசிக்கக்கூடிய பிழைகளை கொண்டு தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய காலக்கட்டத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் உலக சினிமா. அந்த வகையில் எங்களின் 'க...
