
கூட்டத்தில் ஒருத்தன் திரைவிமர்சனம் (தகுதியானவன்) Rank 3.5/5
பதிரிக்கயாராக இருந்து இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஞான்வேல்க்கு வாழ்த்துகள் . இயக்குனர் ஒரு பத்திரிக்கையாளர் என்பதற்கு சாதகாமாக ஒரு விமர்சனம் இல்லை என்று சொல்லிவிடுகிறோம்.
கூட்டத்தில் ஒருத்தன் மிக சிறந்த படம் என்று சொல்லணும் அற்புதமான அறிவுரை என்பதை விட வாழ்கையை சொல்லி இருக்கும் படம் என்று தான் சொல்லணும். இன்றைய 50% சதவீத மாணவர்களை பற்றி சொல்லும் கதை என்றும் சொல்லலாம் எல்லா பெற்றோர்களும் பார்க்கவேண்டிய படம் என்றும் சொல்லணும்
ஊக்கம் மட்டுமே வெற்றிக்கு சிறந்த மருந்து இதை பலர் புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்த்தும் கதை அதோடு தன் நம்பிக்கையை வெளிபடுத்தும் கதை என்றும் சொல்லலாம். இயக்குனர் இன்றய சமுதாயத்துக்கு என்ன வேண்டும் என்பதை காதலோடு கலந்து கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும் உணவு என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் மிக அழகாக சொல்லி இருக்கும் படம் நேர்த்தியான கதை கடைசி அ...