25-வது படத்தில் புதிய அவதாரம்… காவல்துறை அதிகாரியாக மிரட்டும் கிருஷ்ணா; ‘மர்டர் இன் டவுன்’ ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்ப்பு
25-வது படத்தில் புதிய அவதாரம்... காவல்துறை அதிகாரியாக மிரட்டும் கிருஷ்ணா; 'மர்டர் இன் டவுன்' ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்ப்பு
நடிகர் கிருஷ்ணாவின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக உருவாகி வரும் 25-வது திரைப்படம் 'மர்டர் இன் டவுன்'. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் புலனாய்வு அம்சங்களை மையமாகக் கொண்ட இந்தக் க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில், கிருஷ்ணா 'அதியமான்' என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு சவால்களால் நிறைந்த ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக அவர் தோன்றும் விதம், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே படத்தின் கதைக்களம் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
போஸ்டரில் இடம்பெற்றுள்ள இரத்தக்கறை படிந்த ஆவணங்கள், குற்றச் சம்பவ இடத்தின் தடயங்கள், கைவிடப்பட்ட காவல்து...
