
கன்னியாகுமரி மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆரி, ஜி.வி.பிரகாஷ்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று நடிகர் ஆரி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆறுதல் கூறியுள்ளனர். அவர்களை சந்தித்தப்பின் அவர்கள் கூறியதாவது, ‘நாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூற வந்தோம். ஆனால் இங்கே இதுவரை மொத்தம் 60க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக கூறுகிறார்கள். சின்னதுறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரெம்யாஸ், ரஜுஸ்,ஜெயின், ஆண்டனி என நால்வர் உயிர் இழந்துள்ளனர். அந்த குடும்பத்தில் அனைத்து ஆண்களும் இறந்துவிட்டார்கள். அவர்களை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடு திரும்பவில்லை. என்று கூறும் போது மனது படபடக்கிறது.
மீனைத்தேடி கடல் சென்றவர்கள் பிணங்களாக வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரமே இந்த மீன்பிடி தொழில்தான். ஆனால் முறையான தொழில் நுட்பம் இல்லாமல் கடலில் சென்றதால் இம்மாவட்டத்தின் ப...