
குஷ்பூ நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன தென்னிந்திய நடிகர் சங்கம்
கடந்த காலங்களில் திரை உலகில் திரைப்பட விழாக்கள் ,விருது வழங்கும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளும் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிகளில் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.அனால், சமீப காலங்களில் அது வியாபார நோக்கத்தில் நடத்தபடுவதால் அந்த பயனை நடிகர் நடிகைகளும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சங்க சிறப்பு கூட்டத்தில் இது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்பட்டது . அன்று எடுத்த முடிவில் இனிமேல் இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் நடிகர்கள் பொருளாதாரமாக பயன்படும் வகையிலோ ,அல்லது தயாரிப்பாளர் சங்கம் ,நடிகர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்கொடையாக தருபவர்கள் நிகழ்வில் மட்டும் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது . இதற்க்கு பின் நடந்த விழாக்களான கலர்ஸ் டிவி ,விஜய் டிவி ,கலாட்டா டாட் காம் விருது விழாக்களில் இந்த நடைமுறையில் பணம் பெறப்பெற்று அறக்கட்டளையின் ...