
பிரபுதேவா! நீங்கள் இந்தியாவின் பொக்கிஷம்” லக்ஷ்மி பற்றி பாரதிராஜா உணர்ச்சிவசம்
பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணக்கு மற்றும் விமர்சகர்களின் தரவரிசைகளுக்கும் அப்பால் உள்ள மிகப்பெரிய வெற்றி என்பது மிகப்பெரிய மனிதர்களின் மனதிலிருந்து வரும் பாராட்டுகள் தான். பிரபுதேவாவின் லக்ஷ்மி படத்தின் மொத்த குழுவும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பாராட்டு மழையில் நனைந்து இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இது வெறும் ஒரு வாய்மொழி குறிப்பு இல்லை. சென்னை பிரிவியூ திரையரங்கில் பாரதிராஜா 'லக்ஷ்மி' திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு மகிழ்ந்தபோது மொத்த குழுவும் உணர்ச்சிவயப்பட்டு இருந்தது.
படத்தின் கடைசி டைட்டில் கிரெடிட்ஸ் முடிவடையும் முன்பே எழுந்து நின்று, இயக்குனர் விஜய் மற்றும் பேபி தித்யா பாண்டே தோள்களை தட்டி கொடுத்து ஆச்சரியப்பட்டார். "நீங்கள் இந்தியாவின் பெருமை" என்று கூறியதோடு, இந்த படத்தில் நடித்த அத்தனை குழந்தைகளையும் பாராட்டினார். "இந்த குழந்தைகள் வேறும் நடனத்தில் மட்டுமல்லாமல், அவர்களது...