உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் கதாநயாகி நடிகை லதா பிறந்த தினம்
இவர் எம்.ஜி.ஆர் லதா, லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். இவர் 1970கள் மற்றும் 1980களில் புகழ்பெற்ற நடிகையாக தென்னிந்திய திரையுலகில் இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது வள்ளியில் ராஜேஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
லதா 7, ஜூன் 1953ல் இராமநாதபுரத்தில் சண்முக ராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலாராணி ஆகியோருக்கு பிறந்தவர். இவருடைய இயற்பெயர் நளினி என்பதாகும். இவர் சேதுபதி குடும்பத்தில் பிறந்தமையால் லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். நடிகர் ராஜ்குமார் சேதுபதி இவருடைய சகோதரராவார். தன்னுடைய நடனத் திறமையாலும், அழகாலும் தமிழகத் திரையுலகில் நாயகியானார். 1973ல் எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் முதன் முதலாக நாயகியாக நடித்தார்.
இவர் நடித்த படங்கள்
நேற்று இன்று நாளை
உழைக்கும் கரங்கள்
பல்ல...