திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் டிடிஎஸ் வரியைக் குறைக்க வலியுறுத்தும் சத்யஜோதி தியாகராஜன்
திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் டிடிஎஸ் வரியைக் குறைக்க வேண்டுமெனத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க பொருளாளர் டி.ஜி. தியாகராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடித்ததில்,
கொரோனா ஊரடங்கு காரமாகக் கடந்த 2020 மார்ச் முதல் இந்தியத் திரைப்படத் துறையின் மிகவும் கஷ்டப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஊரடங்கு கடந்த 2020 அக்டோபர் மாதம் தளர்த்தப்பட்டு, 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயக்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்பட்டது. மெதுவாக ஜனவரி 2021 முதல் திரையுலகம் புத்துயிர் பெறத் தொடங்கியது. இந்நிலையில், ஏப்ரல் 2021 முதல் மாநில அரசுகள் விதித்த இரண்டா...
