
சிவகார்த்திகேயன் நடிக்கும் எல்.ஐ.சி புதிய படம்
தமிழ் சினிமாவில் இன்று படு பிஸி நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் ஆம் எப்படி ரசிகர் பட்டாளம் நீளம் போல இவர் நடிக்கும் படத்தின் பட்டியலும் அப்படி நீண்டு கொண்டே போகிறது காற்று உள்ள போதே தூற்றி கொள் என்ற வார்த்தைக்கு இவர் தான் அர்த்தம் போல ஆம் கைவசம் தற்போது 6 படங்களுக்கு மெல் அதிகாரபூர்வ அறிப்பிப்பு வந்துவிட்டது.
சமீபகாலமாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆர்.டி.ராஜா தயாரித்த, சீமராஜா படம் பஞ்சாயத்தில் சிக்கியபோது அந்தப்படத்தை ரிலீஸ் செய்ய உதவினார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான கடன்களை அடைக்க பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், இப்போது 'இன்று நேற்று நாளை' ஆர்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அடுத...