
பிக் பாஸ் 2 ஜோடி மகத் மற்றும் யாஷிகா ஜோடி வெள்ளித்திரையில் இணையுமா ?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் நல்ல பெயருடனோ அல்லது கெட்ட பெயருடனோ, எப்படியாவது பிரபலமாகி விடுகின்றனர். நிச்சயம் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து விடுகின்றன.அந்தவகையில் முதல் சீசன் போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாணும், ரைசாவும் பியார் பிரேமா காதல் படத்தில் சேர்ந்து நடித்தனர்.
இப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இருவரும் தற்போது பிஸியாகி விட்டனர். ஹரிஷ் தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஹரீஷ்-ரைசாவைத் தொடர்ந்து, புதிய படத்தில் மஹத்தையும், யாஷிகா ஆனந்தையும் சேர்ந்து நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, யாஷிகாவும், மஹத்தும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. ஆரம்பத்தில் இதனை மறுத்த இருவரும் பின்னர் ஒப்புக் கொண்டனர்.
இதனால், மஹத்தின் காதலி பிராச்சி கோபமடைந்தார்....