
விரைவில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித் உறுதி படுத்திய பிரேம்ஜி
அஜித் -வெங்கட் பிரபு கூட்டணி மீண்டும் இணைவது குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் நடிகர் பிரேம்ஜி.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படம் கடந்த 2011-ம் ஆண்டில் வெளியாகி வெற்றியடைந்தது.
படத்தில் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் அஜித்தும், கிரிக்கெட் சூதாட்ட கும்பலை வளைத்து பிடிக்க நியமிக்கப்படும் சிறப்பு புலனாய்வு அதிகாரியாக அர்ஜுனும் நடித்திருந்தனர். யுவன்சங்கர் ராஜா இசையில் ”மச்சி ஓபன் த பாட்டில்” பாடல் முதல் படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்த நிலையில், நடிகர் அஜித்தை கடந்த மார்ச் மாதத்தில் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார். இருவரும் சந்தித்த புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் படத்தைப் பார்த்த அஜித் ரசிகர்கள், ‘மங்காத்தா 2’ படம் உறுதியாகிவிடும் என்று எதிர்பார்தத்து...