
மீண்டும் ஜோடியாக நடிக்கும் ரியல் ஜோடி
'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இதற்காக பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தன்னுடைய தயாரிப்பில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'வானம் கொட்டட்டும்' என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை 'படைவீரன்' படத்தின் இயக்குநர் தனா இயக்குகிறார்.
நாயகனாக விக்ரம் பிரபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக மடோனா செபாஸ்டியனும், விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷையும் ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இப்படத்தின் கதை - வசனத்தை மணிரத்னமும், தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள்.
இந்த படத்தில் சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் கணவன் மனைவியாக நடிக்க உள்ளனர். சரத் குமாரும் அவரது மனைவி ராதிகாவும் பல படங்களில் கணவன், மனைவியாக நடித்திருந...